ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்தியா கேட்டுக் கொள்ளவில்லை- ஐ.ஜி.பி - SELANGOR POST

728x90 AdSpace

Latest News
Sunday, April 23, 2017

ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்தியா கேட்டுக் கொள்ளவில்லை- ஐ.ஜி.பி

கோலாலம்பூர், ஏப்ரல் 22 : இந்நாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து மலேசியாவுக்கு இதுரை எந்தவித வேண்டுகோளும் வரவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார்.

அவ்வாறு அவசியம் ஏதும் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் அது மலேசிய நாட்டின் தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் மனு செய்ய வேண்டும் என்றார்.

இதுவரை இந்தியாவிற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. உதவிக் கேட்கும் இந்தியா அதனை முறையாக நாட்டின் சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் அதனை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று வார்சாப் மூலம் தெரிவித்தார்.

ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா என்று அவரிடம் கேட்டபோது டான்ஸ்ரீ காலிட் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று இந்தியாவிலுள்ள நீதிமன்றம் ஸாஹிர் நாயக்கை கைது செய்வதற்கு இரண்டாவது தடவையாக கைது ஆணை வெளியிட்டது.

இந்தியாவின் தேசிய விசாரணைப் பிரிவு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த கைது ஆணையை பிறப்பித்தது.

அண்மையில் ஸாஹி நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி, வழக்கறிஞர் சித்தி காசிம் உட்பட 19 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். –தி மலேசியன் டைம்ஸ்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

AMARAN!!!! Komen jahat akan di padam,

Item Reviewed: ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்தியா கேட்டுக் கொள்ளவில்லை- ஐ.ஜி.பி Rating: 5 Reviewed By: Johari Seman